Mar 16

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதிவாதிக் கூண்டில் மன்றாட்டம்

வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்பில் கொலையாளிகளை அவசரமாக கைது  செய்யுமாறும், கொலையுடன் தொடர்பு அற்ற தன்னை பிணையில் விடுவிக்குமாறும் முன்னாள் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க பிரதிவாதிக் கூண்டில் இருந்தவாறு நீதிவானிடம் மன்றாடினார்.

குற்றப் புலனயவுப் பிரிவினர் இக்கொலை விசாரணைகளைப் பொறுப்பேற்று இரு வருடங்களும் ஒரு மாதமும் கடந்துள்ள நிலையில் தன்னை இக்கொலையுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்து ஒரு வருடமும் 3 மாதங்களும் ஆகின்றன.

கொலை சதி தொடர்பில் சந்தேகம் சந்தேகம் எனக் கூறியே என்னை விளக்கமறியலில் வைத்துள்ளனர். எனக்கு பிணை அளிக்க இந்த நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது. நான் கொலை செய்யவில்லை. எனவே தான் வஸீமின் கொலையாளிகளை உடன் கைது செ ய்யுங்கள் என இந்த மன்றைக் கோருகின்றேன் என்று கோரினார்.