Sep 07

முன்பள்ளிக்கு மின் இணைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் போரால் மிகவும் பதிக்கப்பட்ட முகமாலை இளம்தென்றல் முன்பள்ளிக்கு மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனிடம் குறித்த கிராம இளைஞர்கள் மற்றும் மக்கள் சில மாதங்களுக்கு முன்பு மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களுக்கு தவிசாளர் தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த மின்இணைப்புக்கான பணத்தினை மாகாணசபை உறுப்பினர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிமூலம் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இணைப்பு சீர்செய்யும் பணியை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் மற்றும் உபதவிசாளர் கஜன் உறுப்பினர்களான வீரவாகுதேவர்,ரமேஷ் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.