Sep 07

அகதிகளுக்கு ஏமாற்றமளித்த பிரான்ஸ்!

பிரித்தானியாவிற்கு செல்லும் நோக்கில் காத்திருந்த 500 அகதிகளை பொலிஸார் முகாம் ஒன்றிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆங்கிலக் கால்வாய் ஓரமாக Dunkirk பகுதியில் லொறிகள் அல்லது படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த சுமார் 500 அகதிகளையே பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

சுமார் 200 பொலிசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த முகாமிலிருந்த அகதிகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஈராக்கை சேர்ந்த குர்திஷ் இனத்தவர்கள் என கூறப்படுகின்றது.

பிரான்சின் வடக்குக் கரையோரமாக புதிய குடியிருப்புகள் உருவாகி விடாமல் தடுக்க அரசு தீர்மானித்துள்ளதன்அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.