Sep 07

மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை.....காரணம் தெரிந்தால் அதிர்ந்தே போவீர்கள்!!

தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட மணப்பெண்ணின் புகைப்படம் போல் அல்லாது, சற்று வித்தியாசமாக இருந்த மணப்பெண்ணைப் பார்த்து மனமுடைந்த மாப்பிள்ளை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன் என்பவர், அரச ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கு பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து அந்த பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்துள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்த ஷேக், பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.இதனை அடுத்து திருமண மேடையில் மணப்பெண்ணைப் பார்த்த ஷேக், மனமுடைந்து திடீரென அறையொன்றுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன