Sep 07

இளவரசி டயானாவின் நினைவிடம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

இளவரசி டயானா இறந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இதுவரை ஓரளவு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அவரது 21 அவது ஆண்டு நினைவு நாள் கடந்துள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம், அது அமைந்திருக்கும் தீவு ஆகியவற்றின் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய Northants இலுள்ள Althorp House என்னும் இடத்தில் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

1975ஆம் ஆண்டு டயானாவின் தந்தை எட்டாம் Earl Spencer என்ற பட்டத்தை பெற்றதும், டயானா Northants இலுள்ள தனது பூர்வீக இலத்திற்கு முதலாவதாக சென்றார்.

1992ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்ததும் அவரது பூர்வீக வீடு, டயானாவின் இளைய சகோதரரான சார்லசுக்கு அளிக்கப்பட்டது.

அங்கு டயானாவின் நினைவாக அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு ஓக் மரம் நடப்பட்டது.

துரதிர்ஷடவசமாக அங்கு இப்போது 36 மரங்கள் மட்டுமே இருக்கின்றன, அவர் தனது 36ஆவது வயதில் கோர விபத்தில் உயிரிழந்திருந்தார்.