Sep 07

திருகோணமலையில் வாகன விபத்து… மூன்று பேர் படுகாயம்

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தண்ணீர் ஏற்றிச்சென்ற பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரின் தண்ணீர் பவுசர் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேருமே படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

தற்போது மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.