Sep 06

மாணவி சோபியா குறித்த கேள்வி - அதிர்ச்சி பதிலளித்த ரஜினி.!

Image

கனடாவில் கணிதத்துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுவரும் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை - தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணித்த போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாஜக தலைவர் தமிழிசைக்கு முன்னதாக முழக்கமிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், சோபியா பயங்கரவாதியென பிரச்சாரமும் செய்து வருகிறது பாஜக கூடாரம். இந்த விவகாரத்தில் தமிழிசை மற்றும் பாஜகவின் அணுகுமுறையை ஜனநாயக சக்திகள் அனைவரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினியிடம் குட்கா விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணை, மாணவி சோபியா மீதான வழக்கு பதிவு ஆகியவை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்து சென்றார் ரஜினி.