Sep 06

லண்டனில் ‘The House with a Clock in Its Walls’ திரைப்படத்தின் முதல் திரையிடல்!

விரைவில் வெளிவரவிருக்கும் ‘The House with a Clock in Its Walls’ என்ற சிறுவர் திரைப்படத்தின் முதற்காட்சி லண்டனில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.

திகில் திரைப்படங்களைத் தயாரிப்பதில் முதன்மை பெற்ற இயக்குனரான எலி ரொத் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு மிகவும் திகிலூட்டும் வகையில் குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பத்து வயது சிறுவன் தனது மாமா வீட்டிற்கு சென்ற வேளையில் அங்கு சுவர்களுக்கு பின்னாலிருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் வருவதனை அறிகிறான். அதனைத் தொடர்ந்து, தனது நண்பனுடன் இணைந்து அவ்வீட்டில் மறைந்திருக்கும் அமானுஷ்யத்தினைக் கண்டுபிடித்து வெற்றிகொள்வதே ‘The House with a Clock in Its Walls’ என்ற திரைப்படத்தின் கதையம்சமாகும்.

திகில் பட வல்லுனரான இயக்குனர் எலி ரொத், ‘Hostel’ series, ‘Knock Knock’ , ‘The Green Inferno’ ஆகிய திரைப்படங்களை இயக்கி, திகில்படங்களை விரும்பி பார்க்கும் சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களையும் கவர்ந்த இயக்குனராக காணப்படுகிறார். இத்ரைப்படத்தினையும் முற்றுமுழுதாக சிறுவர்களுக்கு ஏற்றாற்போல் தயாரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திரைப்படம் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் திரையிடப்படப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.