Sep 06

இரண்டாவது ‘ஜனபல’ மக்கள் சக்தி போராட்டம் கண்டியில் நடைபெறும் -நாமல்


இரண்டாவது ‘ஜனபல’ மக்கள் சக்தி போராட்டம் கண்டியில் நடைபெறும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்கள் சக்தி கொழும்பிற்கு எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம், நேற்று நண்பகல் 12 மணிமுதல் கொழும்பின் அதிகாரத்தை ஒன்றிணைந்த எதிரணி கைப்பற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணி தரப்பில் இவ்வாறு போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்க தரப்பில் இதற்கு மாறாக அவர்களின் போராட்டம் தோல்வியில் நிறைவடைந்ததாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத