Sep 06

மஹிந்தவால் மட்டுமே முடியும் என்கிறார் கோத்தா

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை­மை­யி­லான ஆட்­சியை மீண்டும் நாட்டில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கே இன்று (நேற்று)பெருந்­தி­ர­ளானோர் கொழும்பு மாந­கரில் கூடி­யுள்­ளனர். எனவே விரைவில் அவ் எ­திர்­பார்ப்பு நிறை­வேறும் என முன்னாள் பதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவத்த அவர்,

மஹிந்த ராஜபக்ஷவி­னா­லேயே நாட்டின் பொரு­ளா­தாரம், பாது­காப்பு என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்த முடியும். அத்­துடன் பாதாள உலகக் குழுக்­களின் செயற்­பாடு மற்றும் போதைப்­பொருள் வர்த்­த­கத்­தையும் கட்­டுப்­ப­டுத்த முடியும்.  அவர்­ மீதே மக்­களும் நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் என்றும் தெரிவித்தார்.