Jun 09

ஆட்சியமைக்கத் தயாராகிறார் தெரேசா மே

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் வகையில் பிரதமர் தெரேசா மே மகாராணியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா நேரப்படி 12.30 மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் பெரும்பான்மையை இழந்துள்ள போதிலும் தொழிற் கட்சியை விடவும் கூடுதலாக தொகுதிகளை வென்றுள்ளது. இதனால் கொன்சவேற்றிவ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

650 தொகுதிகளுக்காக நடைபெற்ற பொதுத் தேர்தலில் 649 தொகுதிகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ளன. முடிவுகளின் பிரகாரம் 318 இடங்களில் கொன்சவேற்றிவ் கட்சியும் 261 இடங்களில் தொழிற்கட்சியும் வெற்றிபெற்றுள்ளது.

எனினும்இ இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இவ்வாறிருக்க ஐனநாயக ஒன்றியக் கட்சி கொன்சவேற்றிவ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.