Sep 06

மைக் பொம்பியோ-சுஸ்மா சுவராஜ் இடையே முக்கிய சந்திப்பு!

அமெரிக்கா ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இரு நாட்டிற்குமிடையிலான மூலோபாய பங்காளித்துவத்தை உயர்த்துவது மற்றும் உறவுநிலையை பலப்படுத்தவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

இதற்கு முன்னர் நேற்று டெல்லியை வந்தடைந்த மைக் பொம்பியோவை அமைச்சர் சுஸ்மா விமான நிலையத்தில் வைத்து சம்ரதாயப்படி வரவேற்பளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு வருகைதந்துள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.