Sep 06

என். விந்தன் கனகரட்ணம் கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்தைந்தாயிரம் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணசபை யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கூத்தன் கலட்டி வேலணை கிழக்கு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்தைந்தாயிரம் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம்ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் கூத்தன்கலட்டி, வேலணை, ஸ்ரமாணிக்கப்பிள்ளையார் ஆலய புணரமைப்புப் பணிக்காக ரூபா எழுபத்தைத்துஆயிரம் வழங்கி வைத்தார்.

மேற்படி ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் அனைவரினதும் கோரிக்கைக்குஅமைவாக நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர்என். விந்தன் கனகரட்ணம் கூத்தன்கலட்டி, வேலணை கிழக்கு, ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கான ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம்பெறுமதியான காசோலையினை , 05.09.2018 அன்று தமிழத் தேசியக்கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செல்லப்பாபார்த்தீபன் மற்றும் சிவலிங்கம் அசோக்குமார் ஆகியோர்களுடாக ஆலயத்தில்வைத்து வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் சார்பாகபரிபாலனைசபையின் தலைவர் இராமன் கதிர்காமநாதன் மற்றும்பொருளாளர் மாணிக்கம் கிருபாகரன் மற்றும் வேலணை பிரதேச கலாசாரஉத்தியோகத்தர் பா. ஜெயதாசன் என பலரும் கலந்துகொண்டனர்.