Jun 09

எதிரணியை எளிதாக கருதக்கூடாது: வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை

இலங்கையிடம் தோல்வியடைந்ததை தொடர்ந்து எதிரணியை எளிதாக கருதக்கூடாது என வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் போதுமான ரன்களை குவித்தோம். எங்களது பந்து வீச்சாளர்களை நம்பினோம். ஆனால் இலங்கை சிறப்பாக பேட்டிங் செய்து விட்டது. அவர்கள் உத்வேகத்தை இழக்காமல் நல்ல ஷாட்டுகளை அடித்தனர்.நாங்கள் ஒன்றும் வெல்ல முடியாத அணி அல்ல. எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாகத்தான் வீசினார்கள். ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை.

எந்த ஒரு அணியையும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது. அது போன்று நினைத்து விளையாடினால் எதையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் 11-ந் தேதி மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

ஒரு வேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா 3 புள்ளிகளுடன் இருக்கும்.

இந்தியாவுக்கு ரன் ரேட் (+1.272) நல்ல நிலையில் இருப்பதால் அரை இறுதிக்கு முன்னேறும்.