Sep 06

பாதிக்கப்பட்ட குழந்தைகளை கௌரவித்த அரச தம்பதியர்!

மிக மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கௌரவப்படுத்தும் வகையிலான வெல் சைல்ட் விருது பெறுவோரை சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேர்கன் மார்கில் ஆகியோர் சந்தித்துள்ளனர்.


விருது வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக அது தொடர்பாக ஆராயும் வகையிலான கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டன் ஹோட்டலொன்றில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் சசெக்ஸ் இளவரசரும், சீமாட்டியும் கலந்துக் கொண்டு விருதுபெறுவோருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் அமைப்பின் காப்பாளராகவும் இளவரசர் ஹரி விளங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் விருது வழங்கும் நிகழ்விலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.