Sep 06

பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

மியான்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் இடம்பெற்ற தாக்குதலைகள் மற்றும் அதற்கான அந்த நாட்டு இராணுவத்தின் பங்கினையும் வெளிக்கொண்டு வந்த ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டணை விதித்தது.


32 மற்றும் 28 வயதுடைய இரு ஊடகவியலாளர்களுக்கே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அவர்களது கைதுகளுக்கு மியான்மரில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலிருந்து எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன.இந்த கைதுகளை அமெரிக்காவும் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளது.

இந்த கைதுகள் மூலம், மியன்மார் இராணுவத்தின் மோசமான போக்கு மற்றும் உண்மை என்பன நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹெலே தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், கைதான ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.