Sep 06

ஆப்கானிஸ்தானை உலுக்கிய தற்கொலை குண்டுத்தாக்குதல்!!


ஆப்கானிஸ்தானின் காபுல் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதல்களில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் எந்த அமைப்பாலும் இதுவரை பொறுப்பேற்கப்படவில்லை.இதற்கு முன்னர் , ஐ.எஸ் அமைப்பால் இதுபோன்ற தாக்குதல்கள் காபுல் நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.