Sep 06

எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட மீனவர்கள் குழு


தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு ஒன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த போது, படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.நாகபட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 படகுகளில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளனர இந்தநிலையிலேயே அவர்கள் கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.