Sep 06

பாகிஸ்தானின் 13 ஆவது ஜனாதிபதியாக அரிஃப் அல்வி தேர்வு!

பாகிஸ்தானின் 13 ஆவது ஜனாதிபதியாக அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி தேர்வாகியுள்ளார். பாகிஸ்தானின் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது.


இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர்.

பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது.

இதில் மொத்தமாக பதிவான 1100 வாக்குகளில், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வேட்பாளர் அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வரும் ஒன்பதாம் திகதி, பாகிஸ்தான் ஜனாதிபதியாக அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி பதவியேற்கவுள்ளார்.  வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரிஃப் அல்வி, தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.