Sep 06

விவசாயிகள் பாரிய போராட்டம் – முடங்கியது டெல்லி!

தேசிய வேளாண்மை ஆணையத்தின் பரிந்துரை விலையை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்சக் கூலியை உயர்த்துதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில்  பிரமாண்ட பேரணி இடம்பெற்றது.இன்று பிரமாண்ட பேரணி இடம்பெற்றது.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் பேரணியில் சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாயிகள் பேரவை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், நாடு முழுவதும் இருந்தும் வகை தந்த விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து பேரணி நடைபெற்ற பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.

இடு பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளை பொருட்களுக்கு போதிய கொள்முதல் விலை கிடைவில்லை என தெரிவித்தே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.