Sep 05

ஐஸ்வர்யாவை கலாய்த்த ரித்விகாவை வலியால் துடிக்கவிட்ட பிக் பாஸ்

ஐஸ்வர்யாவை நாமினேட் செய்த ரித்விகாவை அழவிட்டுள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் 2 வீட்டில் ஏதாவது வித்தியாசமாக செய்யுங்கள் என்று பார்வையாளர்கள் சொன்னது தப்பாப் போச்சு. சக போட்டியாளர்களை காப்பாற்ற லூசுத் தனமாக ஏதாவது செய்ய வைக்கிறார் பிக் பாஸ். நேற்று ஜனனியை காப்பாற்ற தாடி பாலாஜி மொட்டை அடித்துக் கொண்டார்.

சென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டுள்ளார். நீங்கள் அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லையே ஐஸு. தாடி பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை போட்டுவிட்டார், ஜஸுக்கு மட்டும் ப்ரொபஷனலை அழைத்து வந்து தலைமுடியை நறுக்க வைத்துள்ளார் பிக் பாஸ். ஐஸ்வர்யா ஹேர்கட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து செய்தது போல் உள்ளதே.

விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் லோகோவில் உள்ள கண்ணை தனது கையில் டாட்டூ போட்டுள்ளார் ரித்விகா. அந்த டாட்டூ அழியாது என்பது குறிப்பிடத்தக்கது. வலித்தாலும் பரவாயில்லை என்று அழுது கொண்டே டாட்டூ போட்டுள்ளார். ஐஸ்வர்யாவை நக்கலாக பேசி நாமினேட் செய்ததற்காக இந்த தண்டனையா?

விஜி ரித்விகாவிடம் சென்று என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் பிக் பாஸில் இருக்கும் I -ஐ டாட்டூ குத்த வேண்டும் என்றார். அதை கேட்ட மும்தாஜோ அது I அல்ல eye என்று கூறி விஜிக்கு நோஸ்கட் கொடுத்தார்.

ஐஸ்ர்யாவுக்கு முடியை நறுக்கியதற்கு பதிலாக மொட்டை போட்டிருந்தால் சிம்பதி கிரியேட் பண்ணியிருக்கலாமே பிக் பாஸ்.