Sep 05

கனடாவில் குழந்தைகள் தற்கொலை, துஷ்பிரயோகம், இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது -அறிக்கை!

கனடாவில் தற்கொலை, சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தை இறப்பு என்பன அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தற்கொலை பற்றிய உயர்ந்த விகிதங்களைக் காட்டும் புள்ளிவிபரங்கள் அடங்கிய புதிய அறிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.

Children First Canada மற்றும் ஓ ‘பிரையன் பொது சுகாதாரம் குறித்த நிறுவனம், குழந்தை நலன், உடல் பருமன், வறுமை விகிதம் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கையை தயாரித்திருந்தது.

குறிப்பாக மனநல பாதிப்பு ஒன்ராறியோவிலேயே அதிகம் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒன்ராறியோவில் 2016 ஆம் ஆண்டில் 16,291 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து 2 ஆவது இடத்தில் கியூபெக் நகரமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.