Sep 05

அமெஸ்பரியிலும் நொவிசொக் நச்சுத் திராவக தாக்குதல்: ஆய்வில் உறுதி

தென்மேற்கு பிரித்தானியாவான அமெஸ்பரியில் இடம்பெற்ற நச்சுத் தாக்குதலிலும், சலிஸ்பரியில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நொவிசொக் என்ற அதே நச்சுத் திராவகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக பரிசோதனையில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

டான் ஸ்டர்கெஸ் மற்றும் அவரது கணவர் கடந்த ஜுன் மாதம் நச்சுத்தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நிலையில், டான் ஸ்டர்கெஸ் கடந்த ஜுலை மாதம் உயிரிழந்தார்.

இந்த நச்சுத்தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அதனை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான தாக்குதல்களின் குற்றவாளிகள் இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.