Sep 05

இந்தியா சீனா மோதலில் அடைக்கலமின்றி தவிக்கும் வடமாகாண மக்கள்!

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கான வீட்டுத் திட்டம் இப்போதைக்கு நடைமுறைக்கு வரப்போவதில்லை என்ற தகவலை சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்வதில் இந்திய மற்றும் சீன அரசுகளுக்கிடையில் கடும் முரண்பாடுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே அமைச்சர் சுவாமிநாதன் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் எந்த நிலையில் இருக்கின்றது என்று நேற்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் வைத்து ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா அமைச்சரிடம் வினவினார். இதற்கு பதிலளித்த போது சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.