Sep 05

காலிமுகத்திடலை நோக்கி பயணிக்கும் பாரஊர்திகளுக்கு வரையறை

கொழும்பில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பட்டம் காரணமாக  காலிமுகத்திடல் பகுதிக்கு பாரஊர்திகள் செல்ல வரையறுக்கப்பட்டுள்ளது.


ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி வீதிகளில் பயணிக்கும் பாரஊர்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.