Sep 05

கொழும்பை பதற்றமாகுமா மகிந்தவின் போராட்டம்...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் சக்தி கொழும்பிற்கு ( ஜன பலய) எனும் போராட்டம் இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.நடப்பு அரசாங்கத்தின் சமகால அரசியல் பொருளாதார தளம்பல் நிலையினை சுட்டிக்காட்டி ஆட்சியின் போக்கினை விமர்சித்து மகிந்த அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட தயாராக உள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளதோடு கொழும்பு நகர சபை பகுதியில் அமைந்திருக்கும் விகார மகா தேவி பூங்காவில் குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்.

அத்துடன் , ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் , போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் , பொதுமக்களுக்கோ அல்லது பொது உடமைகளுக்கோ ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சேதம் ஏற்படுமாயின் , காவற்துறையினர் தங்களது அதிகாரத்தினை முழுமையாக பயன்படுத்துவார்கள் என காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளதோடு, அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிர்காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.