Sep 05

அனுராதபுரத்தில் யானையொன்று கொலை

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டு யானையொன்றின் சடலம் அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய - பம்பரஹெல பிரதேசத்தின் வயலொன்றில் இருந்து இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில், காவற்துறையால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் தற்போது சம்பவிடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த யானை கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.