Sep 05

பதின்மூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட மாணிக்க பாதணிகள் மீண்டும் கிடைத்தன!

‘தி விஸார்ட் ஒஃப் ஓஸி’ திரைப்படத்தில் ஜூடி கார்லண்டினால் அணியப்பட்ட மாணிக்க பாதணி சோடி ஒன்று பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் கிடைத்துள்ளது.


மின்சோடா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த பாதணி சோடியை , 2005 ஆம் ஆண்டு ஜன்னல்களை உடைத்து சிலர் திருடிச் சென்றனர்.

இந்த பாதணிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர் சன்மானம் தருவதாக ஒருவர் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று 10 வது ஆண்டில் அந்த அறிவிப்பு காலாவதியானது.

1939 ஆம் ஆண்டுகளில் திரைப்படங்களில் கார்லண்ட் அணிந்திருந்த வேறு மூன்று சோடி மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட பாதணி ஜோடிகளும் உள்ளன.

எவ்வாறாயினும், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காணாமல் போன பாதணிகள் எங்கிருந்து கிடைக்கப் பெற்றன என்பது தொடர்பாக எப்.பி.ஐ. விசேட முகவர் ஜோஆன் சன்போன் தகவல் வௌியிடவில்லை.