Sep 05

ஐந்து நிமிடங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டான ரியல்மி தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனான ரியல்மி 2 மாடலை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

ரியல்மி 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிளாஷ் முறையில் இதன் முதல் விற்பனை நேற்று (செப்டம்பர் 4) மதியம் 12.00 மணிக்கு துவங்கியது. ஐந்து நிமிடங்கள் நீடித்த விற்பனையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்ததாக ரியல்மி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் ஃபிளாஷ் விற்பனை இரண்டு நிமிடங்களில் நிறைவுற்ற நிலையில் அடுத்த விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் அசத்தல் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்த மாதமே அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்துள்ளது.