Sep 05

பிரெக்சிற்றினால் பென்குயின்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பிரெக்சிற்றின் எதிரொலியாக ஃபாக்லண்டிலுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பென்குயின்களை பாதுகாப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை இழக்க நேரிடும் என வர்த்தக அமைச்சர் எச்சரித்துள்ளார்.

குளிர்பிரதேசங்களில் வாழும் பென்குயின்களுக்கு கோடைக் காலங்களில் அதன் தாயகமாக ஃபாக்லண்ட் தீவு காணப்படுகிறது.

அங்கு காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பென்குயின்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கைகளுக்கென ஐரோப்பிய ஒன்றியம் நூறாயிரக் கணக்கான பவுண்ட்களை நிதி உதவியாக வழங்கி வருகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பட்சத்தில் அந்நிதியை பிரித்தானியா இழக்க நேரிடும் அபாயம் காணப்படுகிறது.

இதனால் மாற்று நிதி உதவித் திட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையை ஃபாக்லண்ட் தீவு அமைச்சர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.