Sep 05

ஜப்பானை தாக்கிய ஜெபி சூறாவளி: உயிரிழப்பு 7ஆக உயர்வு!

ஜப்பானின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாதவாறு பாரிய சீர்குழைவை ஏற்படுத்திய ஜெபி என்ற பெயர்கொண்ட சூறாவளி ஏற்படுத்திய அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த சூறாவளி தாக்கத்தால் இதுவரை200 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த சூறாவளி மணிக்கு 172 கிலோமீற்றர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் மிக பயங்கரமாக மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகப்பெரிய கடல் அலைகள் மேலெழுந்துவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.