Sep 05

மேம்பாலம் இடிந்து விழுந்தது துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்தது துரதிருஷ்டவசமானது என தெரிவித்த பிரதமர் மோடி, குறித்தவிபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

தெற்கு கொல்கத்தாவில் மாஜர்ஹாத் என்ற இடத்திலிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் பாலத்தில் சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கியாது. அத்துடன் குறித்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

40 வருட பழமையான அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.