Sep 05

ராகுலுடன் சாப்பிட ரூ.82 ஆயிரம்: நிதி திரட்டிய காங்கிரஸ்

லண்டனில் ராகுல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருடன் சாப்பிட ரூ.82 ஆயிரம் கட்ட வேண்டும் என காங்., நிதி வசூலித்துள்ளது. இதனால் கட்சி தலைமை வருத்தம் அடைந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று இருந்தார். அங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள், அமெரிக்கா போல் கட்சிக்கு நிதி திரட்டும் யுக்தியில் ஈடுபட்டனர். இந்திய பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ள ராகுல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், எஞ்சியிருந்த இடங்களுக்கு 900 பவுண்டுகள் வசூலித்தனர்.

கட்சியின் தலைவர் பேசும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்காக நிதி சேகரிக்கப்பட்டது குறித்து ராகுல் வருத்தமடைந்தார். இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் (ஐ.ஓ.சி.) ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட சங்கத்திலிருந்து இந்திய பத்திரிகையாளர்களுடன் ராகுல் தொடர்புகொள்வதைப் போன்றே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

தொழிலதிபர்கள், உயர்மட்ட தனிநபர்களுடன் சேர்ந்து பத்திரிகையாளர்கள் நிறைந்த அந்த சந்திப்பு உண்மையான இயல்பு பெற்றிருக்கவில்லை என கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சிக்காக கட்சி அப்செட்டில் உள்ளது.