Sep 05

மியான்மரில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிருபர்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆதரவு

அமெரிக்கா துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், மியான்மர் அரசு கைது செய்யப்பட்ட நிருபர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

இது குறித்து ட்விட்டரில் மைக் பென்ஸ் பதிவிட்டுள்ளதாவது :- 

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை வெளிக்கொண்டு வந்த வா லோனே, கியாவ் சொய் ஊ ஆகிய இருவரையும் பாராட்ட வேண்டும். இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளியிடுவது அவர்களின் வேலை, இதற்காக அவர்களை சிறையில் அடைத்திருக்க கூடாது. 

ஜனநாயகத்தை வலிமைப்படுத்த மதம் மற்றும் ஊடக சுதந்திரம் அவசியமாகும். எனவே, மியான்மர் அரசு அவர்களுக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.