Sep 05

நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி தருவேன் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்தில் ராம் கதம் பேசும்போது, தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.

ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

இது தொடர்பாக ராம் கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.