Sep 04

இங்கிலாந்தில் இனி தண்ணீருக்கு கட்டணமில்லை!


இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களிலுள்ள தண்ணீர் விநியோகிக்கும் கம்பனிகள் தங்கள் சேவைக்கான கட்டணத்தினை அறவிடும் செயற்பாட்டினை நிறுத்த தீர்மானித்துள்ளன.

பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் செவெர்ன் ட்ரென்ட் மற்றும் யுனைட்டற் யூட்டிலிற்றீஸ் ஆகிய கம்பனிகள் சராசரி கட்டணத்தில் 5 சதவீதம் மற்றும் 10.5 சதவீதம் குறைக்கவுள்ளதோடு தேமஸ் வோட்டர் என்ற கம்பனி கட்டணம் முழுவதுமாக அறவிடப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது.

இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட தண்ணீர் கம்பனிகளின் திட்டங்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் 2020-2025 வரையான காலப்பகுதிக்குள் அமுல்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு தண்ணீர் கம்பனிகளின் திட்டங்களின் கணிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படுமென ஒஃப்வேர்ட் தண்ணீர் கம்பனி தெரிவித்துள்ளது.

குறித்த திட்டமானது தண்ணீர் வீண்விரயத்தினை தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.