Sep 04

தாய் இறந்த கடற்கரையில் மகனும் உயிரிழப்பு!

இளம் தாய் கடந்த வாரம் கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரின் 7 வயது மகனும் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

Saskatchewan மாகாணத்தில் கடந்த 24 ஆம் திகதி கிரீகன் கெல்டன்ஹஸ் என்ற 7 வயது சிறுவன் காணாமல் போனதாக தகவல்கள் கிடைக்கபெற்றது.

இதனை அடுத்து கடந்த 25 ஆம் திகதி குறித்த சிறுவனின் தாய் தமைன் அங்குள்ள கடற்கரையில் சடலமாக பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து கிரீகனை தேடி வரும் பணி நடைபெற்றது.

தற்போது கிரீகனும் கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான். தாயும், மகனும் ஒன்றாக கடற்கரைக்கு வந்த போது தண்ணீரில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.

இருவரும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இதை விபத்தாகவே இருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் கீரினின் உடற்கூற்று பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவர் இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.