Sep 04

இன்னும் எத்தனை பெண்கள்? இனிமேல் வேண்டாம்…!

‘இன்னும் எத்தனை பெண்கள்? இனிமேல் வேண்டாம்…!’ என பதாதைகளை ஏந்தியவாறு யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடக்கில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறான வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் வன்முறையற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.