Sep 04

உலகின் மிக உயரமான சிலை! – இறுதிக்கட்ட பணியில் இந்தியா

உலகிலேயே மிகவும் உயரமான சிலைகளை நிர்மாணிக்கும் பணியில் இந்திய பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தளவில் 182 மீற்றர் (600 அடி) கொண்ட சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவம் அடுத்த மாதம் 31ஆம் திகதியளவில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்திற்காக குஜராத்தியில் போராடிய மக்கள் நாயகனாக வல்லபாய் பட்டேல் கருதப்படுகிறார்.

ஒற்றுமையின் சின்னமாக இந்த சிலை விளங்குமென இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 29.9 பில்லியன் இந்திய ரூபாய் செலவிடப்படுகிறது. இது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்திற்குரிய செயற்றிட்டமாக உள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி இந்திய அரச தலைவரால் குறித்த சிலை திறந்துவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1947இல் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் பிரதமருக்கு, வல்லபாய் பட்டேல் துணைப் பொறுப்பாளராக இருந்துள்ளார். இந்த தேசியவாதி ‘இந்தியாவின் இரும்பு மனிதன்’ என்றும் போற்றப்படுகிறார்.

சிலை நிர்மாணப் பணிகளில் உள்ளூர் பணியாளர்களுக்கு மேலதிகமாக சீனா போன்ற நாடுகளின் புலம்பெயர் பணியாளர்கள் மற்றும் பொறியியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை உலகின் மிக உயரமான சிலையாக சீனாவின் நீரூற்று கோயிலில் உள்ள புத்தர் சிலை (128 மீற்றர்) திகழ்கின்றது.

இதனிடையே, எதிர்வரும் 2019ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்படவுள்ள சந்திரபதி சிவாஜி மஹராஜ்ஜின் சிலை உலகின் அடுத்த மிக உயரமான சிலையாக தோற்றம்பெறும்.

சுமார் 210 மீற்றர் (690 அடி) உயரத்திற்கு நிர்மாணிக்கப்படும் இந்த சிலை, 2021ஆம் ஆண்டளவில் திறந்து வைக்கப்படும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.