Sep 04

சீனாவில் ஒரே நாளில் 38 ஆயிரம் உயிர்கள் கொன்று குவிப்பு!

சீனாவில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன. சீனாவின் லியோனிங், ஹெனான், ஜியாங்சூ, ஜேஜியாங், அன்ஹீ ஆகிய ஐந்து மாகாணங்களில் கடந்த வாரம் பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது.


அத்துடன் பன்றி இறைச்சி சாப்பிடுவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பன்றி இறைச்சியை பிற மாகாணங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பன்றி இறைச்சி விற்கும் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடு நிறுவன உணவு வேளான் அமைப்பு, ஏனைய ஆசிய நாடுகளுக்கும் அக் காய்ச்சல் பரவக் கூடும் என எச்சரித்ததோடு பன்றிக் காய்ச்சலால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இக் கிருமியால் பாதிக்கப்பட்ட பன்றிகள் சில நாட்களில் இறந்து விடும். அதனால் பரவும் கிருமிகளுக்க எதிரான தடுப்பு மருந்தோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ இதுவரை கண்டு பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.