Sep 04

வாய்த்தகராறால் மருத்துவமனை கூரை மீது ஏறிய பணியாளர்

வெலிசர மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் மருத்துவமனையின் கூரை மீது ஏறி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.நோயாளர் காவு வண்டியில் சேவையாற்றும் குறித்த பணியாளருக்கும், மேலும் ஒரு பணியாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள சேவை நேர திருத்தத்திற்கு எதிராக அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இது தொடர்பில் எமது செய்தி சேவை மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது, வாய்த்தராறு ஏற்பட்டதால் இந்த சேவை நேரம் திருத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.மேலும் சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.