Sep 04

அரச குடும்பத்தின் புதுவரவு: பெயர் என்ன தெரியுமா?

பிரித்தானிய அரச குடும்பத்தின் புதுவரவு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் தத்தெடுத்துள்ள நாய்க்கு Oz என பெயர் வைத்துள்ளனர்.

மே மாதம் திருமணம் செய்து கொண்ட ஹரி – மெர்க்கல் ஜோடி Kensington அரண்மனையில் குடியேறினார்கள். இதனிடையில் செல்லப்பிராணியாக நாயை வளர்ப்பதில் இளவரசி மெர்க்கலுக்கு எப்போதும் அதிக ஆர்வம் உண்டு.

ஏற்கனவே இரண்டு நாய்களை மெர்க்கல் வளர்த்த நிலையில் கனடா வீட்டில் வளர்த்த நாயை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் புதிய நாய் ஒன்றை ஹரியும், மெர்க்கலும் தத்தெடுத்தனர். அதற்கு தற்போது Oz என அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.