Sep 04

அவுஸ்ரேலிய அரச ஊடகத்தை முடக்கிய சீனா!

அவுஸ்ரேலிய அரச ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இணையத்தளத்தை சீனா முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது இணையத்தளம் மற்றும் செயலி என்பன கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீனாவில் திடீரென முடக்கப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ளது.

தமது நாட்டு சட்டத்தை மீறிவிட்டதாக அவுஸ்ரேலிய ஊடகத்தை சீனா சாடியிருந்தது. எனினும், எந்த சட்டம் என்பது தொடர்பாக விபரங்கள் வௌியிடப்படவில்லை. சீனா ஒரு கடுமையான இணைய தணிக்கை ஆட்சியை செயல்படுத்தி வருகின்றது.

தமது நாட்டுக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய உள்ளடக்கத்தை வெளியிடும் போது, வெளிநாட்டு தளங்களுக்கான அணுகலை தடுக்கிறது, சீன மக்கள் அவற்றை பார்க்காத வகையில் தளங்களை முடக்கி விடுகின்றது.

இந்தநிலையில், பிரித்தானிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் நியுயோர்க் ரைம்ஸ் ஆகியவற்றின் இணையத்தளங்களையும் இன்றளவிலும் சீனாவில் பார்க்க முடியாது.

அவுஸ்ரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சீனாவைத் தளமான கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்கள் அந்த தளத்தை தடுத்து வைத்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.