Sep 04

சுரங்க ரயில் நிலையம் அருகே பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

ரொறொன்ரோ நகர சுரங்க ரயில் நிலையத்திற்கு வெளியே, சுயநினைவற்ற நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றபோது, அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் சுதாகரித்துக்கொண்ட நிலையில் தந்தேகநபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபரான 60 வயதான ஒருவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.