Sep 04

ரோபோக்களினால் இயங்கும் உணவகம் – எங்கு தெரியுமா?

ரோபோக்களால் மட்டுமே இயங்குகிறது ஜப்பானில் பிரபல உணவகம் ஒன்று. இதனை உங்களால் நம்ப முடிகின்றதா? இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும்.

இந்த முயற்சியால் உலக சாதனை படைத்துள்ளது ஹென்னா என்ற அந்த பிரபல உணவகம். இதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக உணவகம் ஒன்று முழுவதும் மனித நடமாட்டமில்லாமல் ரோபோக்களால் மட்டுமே இயங்குகிறது.

இவர்களின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. டோக்கியோ நகரில் ஹென்னா என்ற உணவகத்தில் சாப்பாடு ஓடர் செய்வதற்கு, ரிஷப்ஷனில் மனிதர்களுக்கு பதில் டைனோசர் உருவம் கொண்ட ரோபோவையே அமர்த்தியுள்ளனர்.

அதனிடம் நமக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் உணவை ஓர்டர் செய்யலாம். அமர்ந்து சாப்பிடும் இடத்தில் ரோபோக்கள் தான் பரிமாறுகின்றது.

மேலும் அங்குள்ள மீன் தொட்டிகளில் கூட மீன்களாக இருப்பது ரோபோக்கள் தான்.

ஹென்னா உணவகத்தில் உயிர் உள்ள எந்த ஜீவன்களும் இல்லை. ஆனால் மனித உயிர்களை வரவேற்பதில் சிறந்து விளங்குகிறது இந்த ரோபோக்கள்.

இதன்காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியிலும், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் இந்த உணவகம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது.