Sep 03

அல்பேர்ட்டா விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை

அல்பேர்ட்டாவின் தென் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கோல்டேல் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 512இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை குறித்த கார் சாரதி, வீட்டின் மீது மோதுவதற்கு முன்னர் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதனை நேரில் பார்த்தோர் இருந்தால், தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

விபத்தில் சம்பந்தப்பட்ட அந்தக் கார் அல்பேர்ட்டாவின் தென் பகுதியில் உள்ள வீதி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் இருந்நது விலகி அருகே இருந்த பள்ளத்தின் ஊடாகவும், மரங்களின் இடையேயும் சென்று இறுதியில் குறித்த அந்த வீட்டின் மீது மோதி வீட்டினுள் சென்று நின்றதாக கூறப்படுகிறது.

மோதுண்ட அந்த வாகனத்தின் பெண் சாரதி வாகனத்தினுள் சிக்குண்டுவிட்ட நிலையில், வாகனத்தை வெட்டியே அவரை வெளியே கொண்டுவர வேண்டியிருந்ததாகவும், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த வீட்டினுள் பெண் ஒருவரும், அவரது பிள்ளைகளும் இருந்ததாகவும், குறித்த அந்த கார் வீட்டின் குளியல் அறைப் பகுதியில் மோதி உள்நுளைந்த போதிலும், அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.