Sep 03

பூமியை விட 5 மடங்கு தண்ணீர் வியாழனில் உள்ளது: புதிய தகவலை வெளியிட்ட நாசா!

கடந்த 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி கலிலியோ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை சோதனை செய்ய நாசா அனுப்பியது. இந்த விண்கலம் தற்போது பெரிய சிகப்பு புள்ளி ஒன்றை வியாழன் கிரகத்தில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.

மேலும் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது, குறிப்பாக சூரியனை விட 9 மடங்கு ஓட்ஸிசன் வியாழனில் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து வளிமண்டலம் பூமியை விட பல மடங்கு அடர்த்தியாக உள்ளது, எனவே கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி உள்ளது என்றும், இது ஆசிய கண்டத்தை விட மிகப் பெரியதாக இருக்கும். குறிப்பாக இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பியுள்ளது என்ற நாசா அமைப்பு கூறியுள்ளது.

விஞ்ஞானிகள் வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி இருப்பதை விஞ்ஞானிகள் அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், பின்பு நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதாவது அந்த செந்நி புள்ளியில் மட்டுமே பூமியில் இருக்கும் கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே பூமியை விட 5 மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.