Jun 09

பிரிட்டனில் பொதுத்தேர்தல் நிறைவு; எதிர்க்கட்சி முன்னிலை

பிரிட்டன் பார்லிமென்ட் பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய பிரதமர் தெரசா மேக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் தேர்தல்:

பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். அதன்படி கடைசியாக 2015 மே மாதம் தேர்தல் நடந்தது. பிரதமராக தெரசா மே இருந்தார். 2020 வரை பதவிக்காலம் இருந்தது.

வாக்கு எண்ணிக்கை:

ஆனால் இவருக்கு, பிராக்சிட் (ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு) விஷயத்தில் பார்லிமென்ட்டில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. இதனால் தேர்தலை முன்கூட்டிய நடத்த கோரினார். அதன்படி நேற்று(ஜூன் 8) தேர்தல் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை துவங்கியது. 

தெரசா மேக்கு பின்னடைவு:

மொத்தமுள்ள 650 தொகுதிகளில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட 375 இடங்களில் தொழிலாளர் கட்சி 170 இடங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 158 இடங்களையும் பிடித்துள்ளது. ஸ்காடிஸ் தேசிய கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கருத்துக்கணிப்பில் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்ட தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி பின்தங்கியுள்ளது. எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.