Sep 03

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது


திருகோணமலை – ஜயந்திபுர பகுதியில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜயந்திபுர பகுதியில், இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறுநீதிவான் உத்தரவிட்டுள்ளார்.