Sep 03

தொடரூந்து சாரதிகளுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும்


கவனயீனத்தால் விபத்துக்களை ஏற்படுத்தும் தொடரூந்து சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.